Read in English
This Article is From Feb 01, 2019

அரியானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

அரியானா மாநிலம் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் கிருஷ்ணன் லால் மிதா 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement
இந்தியா

காங்கிரஸ் வேட்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியடைந்தார்.

Jind:

அரியானா மாநிலம் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணன் லால் மிதா வெற்றி பெற்றுள்ளார். இங்கு போட்டியிட்ட அவர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த 27 வயது வேட்பாளர் திக் விஜய்சிங் சவுதாலா 37 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளராக இருக்கும் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.

தேர்தல் தோல்வி குறித்து ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ''மனோகர் லால் கட்டார் மற்றும் கிருஷ்ண மிதா ஆகியோர் ஜிந்த் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் ராம்கர் தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement
Advertisement