ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹைலைட்ஸ்
- ஸ்டெலைட் ஆலையை தமிழக அரசு மூடி உத்தரவிட்டுள்ளது
- அந்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேந்தா நிறுவனம் கோரியதையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, ‘ஸ்டெர்லைட் ஆலை திறக்க உயர் நீதிமன்றம் மறுப்பு. சட்டம் தன் கடமையை செய்தது' என்று ட்வீட் செய்து உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார்.
பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகனோ அல்லது அக்கட்சியின் தேசியச் செயலாளரான எச்.ராஜாவோ, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், நாராயணன் திருப்பதி கருத்துக் கூறியுள்ளார்.