This Article is From Aug 07, 2019

சுஷ்மாவுக்கு சல்யூட் வைத்து ‘ஃபேர்வெல்’ கொடுத்த கணவர், மகள்!

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், பல எளிய மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

சுஷ்மாவுக்கு சல்யூட் வைத்து ‘ஃபேர்வெல்’ கொடுத்த கணவர், மகள்!

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சுஷ்மா, 1990-களில் மிசோரம் ஆளுநராகவும் இருந்துள்ளார்

New Delhi:

நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக இயற்கை எய்திய முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தேசமே இரங்கல் தெரிவித்து வருகிறது. இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் சுஷ்மாவின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கும் அவருக்கு பலதரப்பட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். 

சுஷ்மாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு முன்னர் அவரது மகள் பன்சுரி சுவராஜ் மற்றும் கணவர் சுவராஜ் கவுஷால் ஆகியோர், சல்யூட் வைத்து ‘ஃபேர்வல்' கொடுத்தனர். முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், பல எளிய மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். இதனாலேயே அவர் மக்களின் மனங்களை வென்ற அரசியல் தலைவராக இருந்தார். 

சுஷ்மா சுவராஜ், சுவராஜ் கவுஷாலை, சட்டப் பட்ட படிப்பு கற்கையில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார். 47 ஆண்டு காலம் இருவரும் மண வாழ்க்கையில் இருந்தனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சுஷ்மா, 1990-களில் மிசோரம் ஆளுநராகவும் இருந்துள்ளார். சுஷ்மாவும் கவுஷாலும் ட்விட்டரில் பரிமாறிக்கொள்ளும் உரையாடல்கள் வைரல் ரகம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுஷ்மா, அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தவுடன் கவுஷால், “மிக்க நன்றி. மில்கா சிங் கூட ஓடுவதை நிறுத்திக் கொண்டவர்தானே” என்றார். இது ட்விட்டரில் மிகப் பிரபலம். 

அவர் மேலும், “1977 ஆம் ஆண்டு இந்த மாரத்தான் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 41 ஆண்டுகள். இதுவரை நீங்கள் 11 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள். 1977-க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் இரண்டைத் தவிர அனைத்திலும் நீங்கள் போட்டியிட்டீர்கள். நானும் உங்கள் பின்னால் 47 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இனியும் நான் 19 வயது ஆள் கிடையாது. நானும் மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி” என்று குறிப்பிட்டிருந்தது கவுஷாலின் ட்வீட். 
 

.