This Article is From Feb 04, 2019

பாங்காக் மக்கள் மூக்கு, கண்களில் ரத்தம்: அதிகரித்த காற்று மாசால் பாதிப்பு

மக்கள் டிவி, வானோலி மூலம் மாஸ்க் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தபடுகிறார்கள்

பாங்காக் மக்கள் மூக்கு, கண்களில் ரத்தம்: அதிகரித்த காற்று மாசால் பாதிப்பு

சிலர் இருமும்போது ரத்தம் வருவது, கண்களில் ரத்தம் கசிவது என மிக மோசமான நிலையை நகரம் எட்டியுள்ளது.

Bangkok:

பாங்காக் நகரை காற்று மாசு பெரிய அளவில் தாக்கியுள்ளது. இதனால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் சிலர் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் இருமும்போது ரத்தம் வருவது, கண்களில் ரத்தம் கசிவது என மிக மோசமான நிலையை நகரம் எட்டியுள்ளது.

ஆபாத்தான அளவான பி.ஹச் 2.5 என்ற அளவை 41 பகுதிகள் தாண்டியுள்ளன. காற்றில் தூசு, புகை ஆகியவை கலந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

மக்கள் டிவி, வானோலி மூலம் மாஸ்க் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தபடுகிறார்கள்.

kqaa3sdk

தாய்லாந்தில் உள்ள ஒருவர் "எப்படி மாசு உடலை பாதித்துள்ளது" என்பதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதிகாரிகள் மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடித்து சீன நூற்றாண்டை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

உலகின் அதிக காற்று மாசு உள்ள நகரங்களில் பாங்காக் 5ம் இடம் வகிக்கிறது. டெல்லி முதலிடத்தில் உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என அரசு குறிப்பிட்டுள்ளது.

.