Read in English
This Article is From Jul 28, 2018

21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று தெரிந்தது

சந்திர கிரகணம் தொடங்கும் முன்பு, கங்கை நதியில் அமைந்துள்ள கோவில்கள் மூடப்பட்டன

Advertisement
உலகம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணம் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் 57 நொடிகள் நீடித்தது என நாசா அறிவித்துள்ளது. 4 மணி நேரத்திற்கு,  பூமியின் நிழலில் சந்திரன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பா, ரஷ்யா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் முழு சந்திர கிரகணம் காணப்பட்டது. ஆசியா, ஆஸ்திரேலியா பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வட அமெரிக்கா, பசிபிக் கடல் பகுதிகளில் நேற்று ஏற்பட்ட சந்திர கிரகணத்தைக் காண முடியவில்லை. 

கெய்ரோ, ஜெர்மனியின் பவேரியன் கிராமம், பிரேசிலின் ரியோ கடற்கரை, ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்த வரை, சந்திர கிரகணம் தொடங்கும் முன்பு, கங்கை நதியில் அமைந்துள்ள கோவில்கள் மூடப்பட்டன. உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும், தொலை நோக்கி வழியாக சந்திர கிரகணத்தை மக்கள் கண்டனர். 

இந்த சந்திரன் ‘ப்ளட் மூன்’ என அழைக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இதில் வெவ்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். சந்திர கிரகணம் அச்சுறுத்துவதாக யூதர்கள் நம்புக்கிறார்கள். மேலும் கிரகணத்தால் தீய சக்திகள் வெளியேறும் என்பது  இந்துக்களின் நம்பிக்கை, அதனால், கிரகணம் முடியும் வரை கோவில்கள் மூடப்படுகிறது. 

எனினும், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று நீண்ட நேரம் இருக்கக் கூடிய அடுத்த சந்திர கிரகணம் 2123 - ஆம் ஆண்டு நடைப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement