This Article is From Dec 13, 2018

சிறிசேனா சறுக்கல்: பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் ரணில்

இலங்கையின் பிரதமராக, வாக்கெடுப்பில் வென்ற ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நேற்று பாராளுமன்றத்தில் நிரூபித்தார்

Advertisement
உலகம் Posted by

இலங்கையின் பிரதமராக, வாக்கெடுப்பில் வென்ற ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நேற்று பாராளுமன்றத்தில் நிரூபித்தார். அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிரபரை பிரதமராக அறிவித்தபின் இலங்கை அரசியலில் அமைதியற்ற சூழல் நிலவியது.

நேற்று பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தது அதனால் பெரும்பான்பையை நிரூபித்தார் ரணில். சிறிசேனாவின் சொந்த வெறுப்பு தான் ரணிலை பதவியிலிருந்து நீக்க காரணம் என்ற கூறப்பட்டது.

கடந்த அக்டோபர் 26ம், தேதி சிறிசேனா ரணிலை பதவியிலிருந்து நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால், அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

Advertisement

தமிழ் தேசிய கட்சிகள் சிறிசேனாவை எதிர்த்ததும் ரணிலுக்கு பலமாக அமைந்தது. டிசம்பர் 18 வரை சபாநாயகர் கரு ஜெயசூர்யா பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

"சிறிசேனா ஆதரவு எம்பி ஒருவர் இந்த வாக்கெடுப்பின் வெற்றியை ஏற்றுக்கொள்ல மாட்டோம்" என்று கூறியுள்ளார். சிறிசேனா ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என்று கூறிய நிபந்தனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு "மக்கள் விரும்புவதை தான் நான் கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

அதிபர் அதிக பெரும்பான்மையுள்ள தன்னை தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும், அதிபராக இருக்கும் நீங்கள் அரசியலமைப்பை மீறி ஹிட்லரை போல செயல்படாதீர்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார் ரணில். தற்போது சொந்த காரணங்களுக்காக தன்னை மீண்டும் பிரதமராக நியமிப்பதை சிறிசேனா மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

Advertisement