சிறிய ரக விமானத்தில் பயணித்த சலாவும், அவரது பைலட் டேவிட் இப்பொஸ்டனும்கர்ன்ஸே தீவுகளின் அருகே ஜனவரி 21ம் தேதி மாயமாகினர்.
ஹைலைட்ஸ்
- கால்பந்துவீரர் எமிலியானோ சலா சென்ற விமானம் ஜனவரி 21ம் தேதி மாயமானது
- மீட்பு குழுவினர் சலா குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர்
- சலாவின் உடல் அடையாளம் உறுதி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
London: அர்ஜெண்டினா கால்பந்துவீரர் எமிலியானோ சலா பயணித்த விமானம் காணாமல் போனது. அவர் பயணித்த விமானத்தை கடல் பகுதியில் தேடிவந்தனர். அந்த விமானத்தை கண்டுபிடித்து சலாவின் உடலை மீட்டுள்ளனர் இங்கிலாந்து மீட்பு படையினர் .
சிறிய ரக விமானத்தில் பயணித்த சலாவும், அவரது பைலட் டேவிட் இப்பொஸ்டனும்கர்ன்ஸே தீவுகளின் அருகே ஜனவரி 21ம் தேதி மாயமாகினர்.
சவாலான சூழலில் வான்விபத்து விசாரணைக்குழு இவர்களை மீட்கும் குழுவை அனுப்பி தேடியது. இவர்கள் சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் தேடி அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. வானிலை மோசமாகவே தொடர்ந்ததால் தேடுதல் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. ஆனால் இறுதியில் அவரது உடலை விமானத்திலிருந்து மீட்டனர்.
தற்போது சலாவின் உடல் அடையாளம் உறுதி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. சலா கார்டிஃபில் உள்ள அணியில் சேருவதற்காக ப்ரான்ஸிலிருந்து விமானத்தில் பயணித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.