This Article is From Dec 26, 2018

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில் மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஆசியாவிலேயே 2-வது மிக நீளமான ரயில் மேம்பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 120 ஆண்டுகளுக்கு இந்தப் பாலம் தாக்குப்பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை வழிப்பாதை கொண்டதாக இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • 4.9 கி.மீ. நீளம் கொண்டது. செலவு ரூ. 5,900 கோடி
  • 120 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • டெல்லி - திப்ருகர் இடையிலான பயண தூரம் 3 மணிநேரம் குறையும்
Bogibeel:

ஆசியாவிலேயே 2-வதும், இந்தியாவில் மிக நீளமான அசாம் போகிபீல் ரயில் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் உடன் இருந்தார். பாலத்தை திறந்து வைத்த மோடி அங்கு சிறிது தூரத்திற்கு நடந்து சென்றார். அங்கிருந்தவாறே பாலத்திற்கு கீழே குவிந்திருந்த மக்களைப் பார்த்து மோடி கையசைத்தார். 


பின்னர் பேசிய அவர், வாஜ்பாய் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பாலத்தை 2008-ம் ஆண்டிலேயே செயல்பாட்டிற்கு வந்திருக்கும் என்றார். பாலம் தாமதம் ஆனதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் நீளமான ரயில் மேம்பாலம் குறித்த 10 தகவல்கள்

1. அசாமின் போகிபீல் மேம்பாலம்தான் நாட்டிலேயே நீளமான ரயில் மேம்பாலம். இதன் நீளம் 4.9 கி மீட்டர்.

2. முதலில் கடந்த 1997-ம்போது இந்த பாலத்திற்கு அப்போதைய பிரதமர் எச்.டி. தேவகவுடா அடிக்கல் நாட்டினார்.

3. பாலத்தை அமைப்பதற்கு இதுவரை சுமார் 5,900 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

4. முதலில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்குத்தான் பாலம் அமைக்கப்பட இருந்தது. அப்போது பட்ஜெட் ரூ. 3,200 கோடி. பின்னர் தூரம் நீட்டிக்கப்பட்டதால் செலவு அதிகரித்திருக்கிறது.

5. தேவகவுடா அடிக்கல் நாட்டி வைத்தாலும் கடந்த 2002-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் பணிகள் நடைபெறத் தொடங்கின. இன்று வாஜ்பாயின் பிறந்த நாள் என்பதால் அவரை கவுரவம் செய்யும் வகையில் பாலம் திறக்கப்படுகிறது.

6. 30 லட்சம் சிமென்ட் மூட்டைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை வைத்து 41 ஒலிம்பிக் நீச்சல் குளம் கட்டி விடலாம்.

7. இந்த பாலத்தின் மூலம் பயண தூரம் 170 கிலோ மீட்டர் குறைந்து விடும்.

8. சீனாவுக்கு அருகாமையில் இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கு இந்த பாலம் மிகவும் பயன்படும்.

9. சீனாவின் ஜெட் விமானங்கள், டாங்குகளை கண்காணிப்பதற்கு போகிபீல் ரயில் மேம்பாலம் உதவும்.

10. பிரம்ம புத்திரா ஆற்றில் வெள்ளம் வந்ததால் அடிக்கடி இந்த ரயில் மேம்பாலத்தின் பணிகள் தடைபட்டன.

.