This Article is From Dec 26, 2018

கிலோ ரூ.200க்கு அமோக விற்பனையில் எலிக்கறி! எங்கு தெரியுமா?

அறுவடை காலத்தில் மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் பொறிகளைக் கொண்டு எலிகளை வேட்டையாடுகின்றனர்.

கிலோ ரூ.200க்கு அமோக விற்பனையில் எலிக்கறி! எங்கு தெரியுமா?

அசாம் மாநிலம், குமரி காட்டா கிராமத்தில் உள்ள வார சந்தையில் எலிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Kumarikata (Assam):

அசாம் மாநிலத்தில் குமரி கட்டா கிராமத்தில் உள்ள வார சந்தையில், அறுவடை காலத்தில் வயல்களில் இருந்து பிடித்து வரப்படும் எலிகளே முக்கிய பங்கு வகுகின்றன.

இந்த எலிகள், வேகவைக்கப்பட்டு தோல்கள் அகற்றப்பட்டு மசாலாக்கள் தடவப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த சந்தையில், இந்த எலிக்கறி சிக்கன், பன்றிக்கறிகளை விட அமோகமாக விற்பனையாகி வருகின்றன. தற்போது ஒருகிலோ எலிக்கறி ரூ.200 வரை விற்பனையாகிறது.
 

7ctt8eao

உள்ளூர் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை காப்பதற்காக வேட்டையாடும் எலிகளை அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் இந்த வார சந்தை கடைக்காரர்கள், கொள்முதல் செய்கின்றனர். இந்த எலிக்கறி வியாபாரம் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு சிறந்த வருமானமாக மாறி இருக்கிறது.

இரவில் வயலில் நெற் கதிர்களை தின்ன வரும் எலிகளை மூங்கில் பொறிகள் மூலம் பிடிக்கின்றனர். சில சமயங்களில் ஒரே ஒரு எலி 1 கிலோவுக்கு மேல் கூட எடை வரும். ஒரு நாள் இரவில் 10 முதல் 20 கிலோ வரை எலிகள் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

.