Read in English
This Article is From Jan 21, 2019

பிரபல நடிகையிடம் வழிப்பறியில் ஈடுப்பட்ட 'தக் தக்' கும்பல்!

பாலிவுட் நடிகை ஃபாரின் பிரபாகரிடம் திருடர்கள் வழிப்பறியில் ஈடுப்பட்டுள்ளனர்

Advertisement
நகரங்கள் Translated By

திருடர்களை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது

Highlights

  • தென் டில்லியில் உள்ள ஒரு மாலுக்கு சென்று கொண்டிருந்தார் ஃபார்ஹின்
  • மொபைல் போனும் 16000 ரூபாயையும் கொள்ளையடித்தனர்
  • மனோஜ் பிரபாகரின் மனைவி தான் ஃபார்ஹின் பிரபாகர்
New Delhi:

பாலிவுட் நடிகை ஃபார்ஹின் பிரபாகரிடம் திருடர்கள் வழிப்பறியில் ஈடுப்பட்டுள்ளனர். அந்தக் கொள்ளை கும்பல் ‘தக் தக்' கும்பல் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் பிரபாகரின் மனைவி ஃபார்ஹின் பிரபாகர். இவர், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ஞாயிறு அன்று தன் காரில் தெற்கு டில்லியில் உள்ள செலக்ட் சிட்டி மாலுக்கு சென்றுக் கொண்டிருந்தார் ஃபார்ஹின். அப்போது சிக்னலில் கார் நிறுத்திய போது, நான்கு பேர் காரின் ஜன்னலைத் தட்டி, 'காரை ஏன் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, ஃபார்ஹினிடம் இருந்து மொபைல், 16,000 ரூபாய் பணம் உட்பட பல பொருட்களை கண் இமைக்கும் நேரத்தில் திருடிவிட்டு, ஓடத் துவங்கினர். கொள்ளையர்களைத் தடுக்க துணிந்த ஃபார்ஹின், தாக்கப்பட்டுள்ளார். அவர்கள், தடாலடியாக அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

Advertisement

ஆஸ்துமா நோயால் அவதிப்படும் ஃபார்ஹின், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டு, போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

திருடர்களின் கார் எண்ணை வைத்தும் சிசிடிவி மூலமும், அவர்களைக் கண்டறிய நடவடிக்கைகளை போலீஸ் எடுத்துள்ளது.

Advertisement

வாகனங்களின் ஜன்னலைத் தட்டி உதவி கேட்பது போல் கொள்ளையடிக்கும் சம்பவம் டில்லியில் பரவியுள்ளது. அவ்வாறு கொள்ளையடிக்கும் கும்பலை 'தக் தக் கும்பல்' என போலீஸ் அழைக்கின்றனர்.

Advertisement