This Article is From May 20, 2019

ஐஸ்வர்யா ராயை வம்பிக்கிழுத்த பிரபல நடிகர்!! திரையுலகில் பரபரப்பு!

விவேக் ஓப்ராய் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

ஐஸ்வர்யா ராயை வம்பிக்கிழுத்த பிரபல நடிகர்!! திரையுலகில் பரபரப்பு!

இது அருவருக்கத்த பதிவு என்று நடிகை சோனம் கபூர் கண்டித்துள்ளார். ஓப்ராயின் பதிவு அதிருப்தி அளிப்பதாக பிரபல வீராங்கனை ஜுவாலா கட்டா ட்வீட் செய்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • தேர்தல் கருத்துக்கணிப்பு - ஐஸ்வர்யா ராயை இணைத்து மீம்ஸ்
  • ஓப்ராய் பதிவுக்கு இந்தி திரையுலகம் கண்டனம் தெரிவித்து வருகிறது
  • மோடியின் பயோ பிக்கில் ஹீரோவாக நடித்திருப்பவர் இந்த விவேக் ஓப்ராய்
New Delhi:

நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்பான மீம்ஸ் ஃபோட்டோவை வெளியிட்டு, ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார் நடிகர் விவேக் ஓப்ராய். 

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் விவேக் ஓப்ரால் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். மலையாளத்தில் ஹிட்டடித்த லூசிபர் படத்திலும் இவர் வில்லனாக வருவார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்லேட் பாயாக வலம் வந்த ஓப்ராய்க்கு ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம். ஓப்ராயும், ஐஸ்வர்யா ராயும் சில காலம் நெருங்கிப் பழகினர். இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். 

ஓப்ராய்க்கு முன்னதாக பிரபல நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய்க்கு நல்ல நட்பு இருந்தது. இந்த நட்பு திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி ஓப்ராய் ட்விட் செய்திருக்கும் மீம்ஸ், ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

ஓப்ராய் பதிவிட்டுள்ள மீம்ஸ் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு சல்மான் - ஐஸ்வர்யா ஜோடி போலவும், பிந்தைய கணிப்பு ஓப்ராய் - ஐஸ்வர்யா ஜோடி போலவும் இருக்கும். ஆனால் தேர்தல் முடிவுகள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடியில்தான் முடியும் என்று கிண்டலாக தெரிவிக்கிறது. 

தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் விளம்பரத்துக்காக ஓப்ராய் இந்த பதிவை போட்டுள்ளார் என்றும், மட்டமான சிந்தனை ஓப்ராய்க்கு உள்ளது என்று ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்களிடமும் வாங்கிக் கட்டி வருகிறார் ஓப்ராய். 
 

இது அருவருக்கத்த பதிவு என்று நடிகை சோனம் கபூர் கண்டித்துள்ளார். ஓப்ராயின் பதிவு அதிருப்தி அளிப்பதாக பிரபல வீராங்கனை ஜுவாலா கட்டா ட்வீட் செய்துள்ளார்.நடிகர் இர்ஃபான் தனது பதிவில், ப்ரேக் அப் ஆன பின்னர் ஐஸ்வர்யா ராய் குறித்து சல்மான் கான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பிளாஸ்டிக் பொம்மை, எனது வாழ்க்கையை நாசம் செய்தவள் என்று ஐஸ்வர்யாவை ஓப்ராய் பலமுறை விமர்சித்துள்ளார். ஓப்ராய் திருந்த வேண்டும் என்று விமர்சித்திருக்கிறார். 

.