This Article is From Jun 06, 2018

இரண்டு முறை யூரோ மில்லியன் லாட்டரி வென்ற பிரெஞ்சுக்காரர்

கடந்த 18 மாதங்களில் இரண்டு முறை மில்லியன் யூரோக்களை வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

இரண்டு முறை யூரோ மில்லியன் லாட்டரி வென்ற பிரெஞ்சுக்காரர்

The unnamed player held winning tickets on both 11 November 2016 and May 18 this year.

ஹைலைட்ஸ்

  • வெற்றி வாய்ப்பு 140 மில்லியனில் ஒன்று
  • ஆட்டக்காரர்கள் தங்களின் எண்களை தேர்ந்தெடுக்க முடியாது
  • 18 மாதங்களில் இருமுறை லாட்டரி வென்ற பிரெஞ்சுக்காரர்
ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், கடந்த 18 மாதங்களில் இரண்டு முறை மில்லியன் யூரோக்களை வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பெயர் வெளியிடப்படாத நபர், கிழக்கு ஹாட்டே சேவோல் பகுதியிலிருந்து, நவம்பர் 2016 மற்றும் மே 2018 ஆகிய மாதங்களில் 'மை மில்லியன்' மூலம் லாட்டரி வென்றதாக லே பரிசெயின் நாளிதழ் தெரிவிக்கிறது.

யூரோ மில்லியன்ஸ் நிறுவனத்தாரிடம் இந்த லாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 12 ஐரோப்பிய நாடுகளில் வாரம் இருமுறை நடக்கும் ஜாக்பாட் போட்டிகளில், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் பரிசாக கொடுக்கப்படுகிறது.

ஃபிரெஞ்சு ஆட்டக்காரர்கள், யூரோ மில்லியன் சீட்டு பெற்றாலே, மை மில்லியன் ஆட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மை மில்லியன் ஆட்டத்தில் குறைந்தது ஒரு மில்லியன் யூரோஸ் பரிசாக அளிக்கப்படுகின்றன. 

மை மில்லியன் ஆட்டத்திற்கு, ஆட்டக்காரர்கள் தங்களின் எண்களை தேர்ந்தெடுக்க முடியாது. அவை தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மை மில்லியன் ஆட்டங்களில் வெற்றி பெறுவது, 19 மில்லியனில் ஒன்றாகவும், யூரோ மில்லியனில் வெற்றி பெறும் வாய்ப்பு 140 மில்லியனில் ஒன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதை போலவே, ஆஸ்திரேலியா நாட்டில், 40 வயது மதிக்கத்தக்க பெயர் வெளியிடப்படாத நபர் 1,020,487 ஆஸ்திரேலிய டாலர்களும், ஐந்தே நாட்களில் மற்றொரு 1,47,834 ஆஸ்திரேலிய டாலர்களையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Click for more trending news


.