This Article is From Aug 19, 2019

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு!!

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக ஜெனரல் பாஜ்வா கமர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரை நவாஸ் ஷெரீப் நியமித்தார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு!!

இந்த ஆண்டுடன் பாஜ்வா கமரின் பதவிக் காலம் முடிவதாக இருந்தது.

Islamabad:

எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியுடைய பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு எதிர்பார்த்தவாறே இந்த நடவடிக்கையை அரசு வெற்றிகரமாக முடித்தது. 

காஷ்மீரை காரணம் காட்டி இந்தியாவுடன் பிரச்னை செய்து வந்த பாகிஸ்தானுக்கு, மத்திய அரசின் நடவடிக்கை கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனை தடுக்க ஐ.நா. சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை எடுத்துச் சென்றனர். பாகிஸ்தானுக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவின் சிறப்பான தூதரக நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் நடத்தவிருந்த சதிகள் முறியடிக்கப்பட்டன. 

இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தால் கடும் எரிச்சரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை தூண்டிவிட்டு சதிச் செயல்களை செய்யக்கூடும் என நம்பப்படுகிறது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பில் ஜெனல் கமர் ஜாவித் பாஜ்வா இருந்து வருகிறார். 

அவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவதாக இருந்த நிலையில், தற்போது பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-ல் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, கமர் பாஜ்வாவை தலைமை தளபதியாக நியமித்தார். 

பாகிஸ்தானின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இம்ரான் கான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

.