This Article is From Aug 29, 2020

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 20 மீட்டர் சுரங்கம்!

பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவுவதற்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படக்கூடிய இது போன்ற ரகசிய பாதைகளை கண்டுபிடிக்க இந்தப் பகுதியில ஒரு பெரிய தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 20 மீட்டர் சுரங்கம்!

பி.எஸ்.எஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஜம்மு) என்.எஸ். ஜாம்வாலும் இந்த இடத்தை பார்வையிட்டார்

Jammu:

ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வேலிக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டறிந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவுவதற்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படக்கூடிய இது போன்ற ரகசிய பாதைகளை கண்டுபிடிக்க இந்தப் பகுதியில ஒரு பெரிய தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பி.எஸ்.எஃப் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா தனது எல்லை தளபதிகளுக்கு ஊடுருவல் எதிர்ப்பு கட்டம் அப்படியே இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியப் பக்கத்தில் எல்லை வேலியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள இந்த சுரங்கப்பாதை வியாழக்கிழமை ஜம்முவின் சம்பா துறையில் பிஎஸ்எஃப் ரோந்துப் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். பின்னர் சுரங்கப்பாதையை பரிசோதித்தபோது, ​​அதன் வாயில் உள்ள பிளாஸ்டிக் மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் அடையாளங்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அதிகாரிகள் செய்தி நிறுவனமான பிடிஐக்கு தெரிவித்துள்ளனர்.

சுரங்கப்பாதையை முழுவதுமாகக் கண்டுபிடிப்பதற்காக ஒரு ஜேசிபி இயந்திரம் உடனடியாக களத்திற்கு கொண்டுவரப்பட்டு தோண்டப்பட்டது. இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை, துவக்கத்தில் சுமார் 25 அடி ஆழம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற வேறு இரகசிய அமைப்பைக் கண்டறிய இந்தப் பகுதி சர்வதேச எல்லையில் ஒரு மெகா தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.