கடந்த திங்கட்கிழமை அன்று பி.சி.சி.ஐ.யின் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியானது.
மும்பை விமானநிலையத்தில் காத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்களது கைபேசிகளில் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டது.
அந்த ட்வீட்டில், அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் படி குறிப்பிட்டிருந்தது. பலர் 'பப்ஜி' விளையாட்டு என பதிலளித்தனர்.
இந்த நேரத்தில், ப.சி.சி.ஐ வெளியிட்ட புகைப்படத்தில் முன்னணி பந்து வீச்சாளரான ஜச்பிரித் பும்ரா மட்டும் கையில் போன் இல்லாமல் இருந்ததை வைத்து நெட்டிசன்கள் பல மிம்ஸ்களைத் தயாரித்து பும்ராவை கேலி செய்துள்ளனர்.
பல மீம்களும், புகைப்படங்களும் இதுத் தொடர்பாக வெளிவந்திருக்கும் வேளையில், அதில் சில மீம்கள் உங்களுக்காக...
Click for more
trending news