இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெயர் சூட்டியுள்ளனர். (Representational)
ஹைலைட்ஸ்
- ஊரடங்கில் பிறந்த இரட்டை குழந்தைகள்
- இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெயர் சூட்டல்
- தங்களது முடிவை மாற்றி வெறு பெயர் வைக்கலாம் என பெற்றோர் தகவல்
Raipur: சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினர் ஊரடங்கின் போது பிறந்த தங்களது இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெயர் சூட்டியுள்ளனர்.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மத்தியில் பிறந்த இரட்டை குழந்தைகளை கஷ்டங்களை வென்றெடுத்தவர்களாக அடையாளப்படுத்தும் விதமாக ராய்ப்பூரை சேர்ந்த அந்த தம்பதியினர், அனைவரின் மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தும் அந்த பெயர்களை சூட்டியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் அவர்கள் வென்ற அனைத்து கஷ்டங்களையும் பற்றி பெயர்கள் நினைவூட்டுகின்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் 26-27ல் ராய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
எனினும், தங்களது முடிவை மாற்றி வெறு பெயர் வைக்கலாம் என்றும் அந்த தம்பதியினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அந்த குழந்தைகளின் தாயார் பிரீத்தி வர்மா (27) கூறும்போது, மார்ச் 27ம் தேதி அதிகாலையில் இரட்டையர்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன். அவர்களில் ஒருவர் ஆண் குழந்தை, மற்றொருவர் பெண் குழந்தை ஆவார்கள். இதில், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் நாங்கள் பெயர் சூட்டியுள்ளோம்.
எனது பிரசவம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நிகழ்ந்தது. அதனால், அதனை நினைவில் கொள்ளும் வகையில், நானும் எனது கணவரும் அந்த முடிவை எடுத்தோம்.
அந்த வைரஸ் உண்மையில் ஆபத்தானதும், உயிருக்கு அச்சுறுத்தலானதும் தான். ஆனால், அதனால் அது மக்களை சுகாதாரம் மற்றும் பிற நல்லபழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த செய்துள்ளது. அதனால், அந்த பெயர்களை பற்றி நாங்கள் சிந்தித்தோம் என்று அவர் அசாதாரண முடிவுக்கான காரணங்களை கூறினார்.
இதையடுத்து, அந்த மருத்துவமனை ஊழியர்களும் குழந்தைகளை கொரோனா, கோவிட் என அழைக்க தொடங்கினர். அதனால், நாங்கள் அதையே பெயராக வைக்க முடிவு செய்தோம்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதியினர் தலைநகர் டெல்லியில் வசித்து வருகின்றனர்.
மார்ச் 26ம் தேதி நள்ளிரவு திடீரென எனக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, எனது கணவர் 102 மஹ்தாரி எக்ஸ்பிரஸ் சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த வாகன ஒட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த நிலையில், எங்கள் வாகனம் பலமுறை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும், எனது நிலையை பார்த்தும் அனைவரும் உடனடியாக எங்களுக்கு அனுமதி வழங்கினர்.
இது நள்ளிரவாக இருந்த போதிலும், மருத்துவர்களும், செவிலியர்களும் என்னை நல்ல முறையில் பார்த்துக்கொண்டனர்.
ஊரடங்கு காரணமாக மருத்துவமனை வர முயன்ற எங்களது உறவினர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் கிடைக்கவில்லை என்று ஒருவர் கூறினார்.