டிப்லோ மற்றும் ஜான் மேயர் ஆகியோர் இந்த சவாலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் கோடை காலத்தில் சமூக தளங்களில் ஒரு சவால் பிரபலமானது, 'கீகி செலஞ்ச்'. கார் நகர்ந்து கொன்டிருக்குபோதே, அந்த காரின் கதவுகளை திறந்து கீழே இறங்கி 'கீகி' பாடலை பாட வேண்டும். பிரபலங்கள் பலர், இந்த சவாலில் ஈடுபட்டபின் இது வைரலானது. அதேபோல, இந்த ஆண்டும் 'பாட்டில் கேப் சேலஞ்ச்' என ஒரு சவால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழெ விழக்கூடாது. ஜான் மேயர் (John Mayer) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) போன்ற பிரபலங்கள் இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்'-ல் ஈடுபட்டனர். அதன்பின், இந்த சவால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னதாக டேக்வேண்டோ பயிற்சியாளர் மற்றும் வீரரான ஃபராபி டேவ்லெட்சின் (Farabi Davletchin), முதன்முதலில் இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். அதன்பின் யு.எஃப்.சி ஃபெதர்வெயிட் சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே (Max Holloway) இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதன்பின்தான், இந்த சவால் சமூக வலைதளங்களில் பிரபலமானது.
முன்னதாக, இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்' சவாலின் ஈடுபட்ட ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டர். மேலும் அந்த பதிவில் பிரபல பாடகரான ஜான் மேயரையும் (John Mayer) இந்த சவாலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின், ஜான் மேயர் இந்த சவாலில் ஈடுபட்டு ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றினார்.
பின் அதிரடி நாயகனான ஜேசன் ஸ்டாதமும் இந்த சவாலில் ஈடுபட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
ஜேசன் ஸ்டாதம் இந்த சவால் செய்வதை கண்டு ஈர்க்கப்பட்டு தான் இந்த சவாலில் பங்கேற்றதாக அக்சய் குமார், தனது 'பாட்டில் கேப் சேலஞ்ச்' வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க DJ-வான டிப்லோவும் இந்த சவாலின் பங்கேற்று ஒரு வீடியோவை பதிவிட்டார்.
ஹாலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இந்த சவால் பிரபலமாகிவருகிறது, கல்லி பாயின் சித்தாந்த் சதுர்வேதி (Siddhant Chaturvedi) இந்த சவாலில் ஈடுபட்டு இஷான் காட்டர்(Ishaan Khatter) இந்த சவாலை முயற்சி செய்ய அழைப்புவிடுத்திருந்தார்.
நீங்களும் இந்த சவாலை முயற்சித்துள்ளீர்களா? கமென்ட் பகுதிகளில் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!
Click for more
trending news