This Article is From Oct 21, 2019

கர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு! - 2 பேர் படுகாயம்!!

Hubballi explosion: இந்த குண்டு வெடிப்பு ஏற்பட காரணமான அந்த பெட்டியில், பட்டாசுகள் இருந்ததா அல்லது வெடிகுண்டுகள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு! - 2 பேர் படுகாயம்!!

விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (Representational)

Bengaluru:

கர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் இருந்த மர்ம பெட்டி ஒன்று வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, இந்த குண்டு வெடிப்பு ஏற்பட காரணமான அந்த பெட்டியில், பட்டாசுகள் இருந்ததா அல்லது வெடிகுண்டுகள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கர்நாடகாவின் முக்கிய ரயில் நிலைய சந்திப்பில் இருந்து இந்த பெட்டியை ஒருவர் தூக்கும்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கண்ணாடிகள் உடைந்துள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் அல்ல என்றும், விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அதிகாரிகளும் ரயில்வே போலீசாரும் விரைந்து வந்தனர் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

.