சிறுவன் விகானை, பெங்களூரு கெம்பகோடா சர்வதேச விமான நிலையத்தில் அவனது தாயார் அழைத்துச் சென்றார்.
ஹைலைட்ஸ்
- தாத்தா - பாட்டியை பார்க்க சிறுவன் பிப்ரவரியில் டெல்லி சென்றார்
- கொரோனா பொது முடக்கத்தால் சிறுவன் டெல்லியிலே இருந்து வந்தார்
- தனி விமானம் மூலம் சிறுவன் பெங்களூரு திரும்பியுள்ளார்
New Delhi: இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், 5 வயது சிறுவன் ஒருவர், டெல்லியில் இருந்து சிறப்பு பிரிவு மூலமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார். ஒற்றை ஆளாக வந்து, விமான நிலையத்தில் சிறுவன் நின்ற காட்சி பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 5 வயது சிறுவன் விகான் சர்மா, விடுமுறைக்காக டெல்லியில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டிற்கு கடந்த பிப்ரவரியில் சென்றுள்ளார். இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டதால் விகான் டெல்லியில் சிக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் உள்நாட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சிறுவனதை அவரது தாத்தா - பாட்டி, டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு பிரிவு மூலமாக பெங்களூருவுக்கு விமானத்தில் வழியனுப்பினர்.
இன்று பெங்களூரு வந்திறங்கிய சிறுவன், கையில் சிறப்பு பிரிவுக்கான பதாகையை வைத்து நின்றான். மஞ்சள் நிற ஜாக்கெட், அதற்கு மேட்சிங்கான மாஸ், கையில் நீல நிற கையுறை ஆகியவற்றுடன் சிறுவன் நின்ற காட்சி காண்போர் மனதை கொள்ளையடித்தது.
சிறுவன் விகானை, பெங்களூரு கெம்பகோடா சர்வதேச விமான நிலையத்தில் அவனது தாயார் அழைத்துச் சென்றார்.
3 மாதத்திற்கு பின்னர் விகான் பெங்களூரு திரும்பியதாக அவரது தாயார் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 5 விமானங்கள் பெங்களூருவுக்கு வந்திறங்கின. 17 விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், விமானப்போக்குவரத்து தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை எட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை செயல்பாட்டிற்கு வரும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.