மகாராணி எலிசபெத்தை பார்க்காமல் ஓடிச்சென்ற சிறுவன்
எல்லோருக்கும் இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் பார்க்காமல் தரையில் தவழ்ந்து தப்பி ஓடிய சிறுவனின் வீடியோ பதிவு இணையத்தை கலக்கி வருகிறது.
தனது சுற்று பயணத்தில் இருக்கும் ராணி எலிசபெத் அவர்கள், கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி கோராம் எனப்படும் தனது தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்தார். குழந்தைகளுக்கான பல உதவிகளை செய்து வரும் அந்த தொண்டு நிறுவனம், லண்டன் நகரில் மிகவும் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டு நிறுவனமான கோராம் மூலமாக பயன் பெற்று வரும் சிறுவர்களை சந்தித்தார் மகாராணி எலிசபெத். அப்போது அங்கு தனது வளர்ப்பு பெற்றோர்களான டேவிட் மற்றும் கேரி கிராந்துடன் வந்த சிறுவன் நாதன் ராணி எலிசபெத்தை கண்டவுடன் தவழ்ந்து ஓடினான். சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பி நின்று ராணியாரிடம் சத்தமாக குட் பை சொல்லிவிட்டு ஓடிச்சென்றான்.
பதற்றம் ஏற்பட்டால் ஓடுவது எல்லாருடைய வழக்கம் என உணர்த்தும் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியானதை தெடர்ந்து பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது
Click for more
trending news