This Article is From Oct 09, 2019

4வது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட சிறுவன் - மீட்கப்படும் வீடியோ

சம்பவத்தின் போது சிறுவரின் பெற்றோர்கள் யாரும் இல்லை. சிறுவனின் தாத்தா அழுகை சத்தம் கேட்டு உதவிக்கு பிறரை அழைத்துள்ளார்.

4வது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட சிறுவன் - மீட்கப்படும் வீடியோ

சீனாவின் குடியிருப்பு கட்டிடங்கள் ஜன்னல்களில் கம்பிகள் வைத்து கட்டப்படுவை.

சீனாவில் 4 வயது சிறுவனின் தலை பாதுகாப்பு கம்பிகளுக்கிடையே மாட்டிக் கொண்டது. 4வது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

சிறுவனை மீட்கும் காட்சிகள் சீன சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது. குடியிருப்பு கட்டிடத்தில் கம்பி வைத்த ஜன்னல்கள் இருப்பது வழக்கம். கம்பிகளுக்கிடையே சிறுவனின் தலை மாட்டிக்கொண்டது. சம்பவத்தின் போது சிறுவரின் பெற்றோர்கள் யாரும் இல்லை. சிறுவனின் தாத்தா அழுகை சத்தம் கேட்டு உதவிக்கு பிறரை அழைத்துள்ளார்.

யூட்யூப்பில் பகிரப்பட்ட வீடியோவில் சிறுவனை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது காட்டப்படுகிறது. சிறுவன் விழுவதை தடுக்க அவனது நெஞ்சோடு கயிறு கட்டினர். ஹைட்ராலிக் ஸ்ப்ரெடர் மூலம் உலோக கம்பிகளை அகலப்படுத்தி வெற்றிகரமாக மீட்டனர். ஒருவேளை பையன் தவறி விழுந்து விட்டால் பாதுகாக்க அக்கம் பக்கத்தினர் போர்வையை விரித்து பிடித்தபடி நின்றனர்.
 

சீனாவின் குடியிருப்பு கட்டிடங்களில் ஜன்னல்களில் கம்பிகள் வைத்து கட்டப்படுவை. இதற்கு முன்பும் குழந்தைகள் ஜன்னல் சிக்கி மீட்கப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு. 

Click for more trending news


.