போலீசார் அபினின் புகார் கடிதத்தையும், ரிப்பேர் பார்க்கப்பட்ட சைக்கிள்களுடன் சகோதரர்கள் இருக்கும் புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்
தனது சைக்கிளை ரிப்பேர் பார்த்து தராததால், கடைக்காரர் மீது புகார் எழுதி 10 வயது சிறுவன் போலீசில் அளித்திருக்கும் கடிதம், வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் அபின். 10 வயதான அபின் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அபின் மற்றும் அவரது சகோதரருடைய சைக்கிள் ரிப்பேராகியுள்ளது. இதனை சரி செய்வதற்காக அருகில் உள்ள கடைக்காரரிடம் அளித்துள்ளனர்.
நீண்ட நாட்கள் ஆகியும், சைக்கிள் சரி செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக அபின் பலமுறை போன் செய்தும் சைக்கிள் கடைக்காரர் அதனைக் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், சைக்கிள் கடைக்காரர் மீது புகார் தெரிவித்து மெப்பயூர் காவல் நிலையத்தில் தனது கைப்பட எழுதி புகார் அளித்துள்ளார் அபின். கடந்த 25 -ம்தேதி இந்த புகார் கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த கடிதத்தில், தனது சைக்கிளை பெற்றுத்தருமாறும், இதுதொடர்பாக தனக்கு உதவி வீட்டில் யாரும் இல்லை என்றும் அபின் குறிப்பிட்டுள்ளார்.
.
சின்னப்பையனின் புகார்க் கடிதத்தை பார்த்த போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் போலீசார் விசாரித்ததில், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், தனது மகனின் திருமண வேலையால் பிஸியாகி விட்டதாகவும் அந்த கடைக்காரர் கூறியுள்ளார்.
.
பின்னர் ஒருவழியாக 2 சைக்கிள்களையும் கடைக்காரர் ரிப்பேர் பார்த்து தந்து விட்டார். இந்த நிலையில் போலீசார் அபினின் புகார் கடிதத்தையும், ரிப்பேர் பார்க்கப்பட்ட சைக்கிள்களுடன் சகோதரர்கள் இருக்கும் புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இதற்கு லைக்சும், ஷேரும் குவிந்து வருகிறது.
Click for more
trending news