டிக்டாக் போன்ற பிரபல சீன ஆப்களை அன் இன்ஸ்டால் பண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஹைலைட்ஸ்
- கோ கொரோனா என முழக்கமிட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் அத்வாலே
- சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை
- சீன உணவகங்களுக்கு அனைத்து மாநில அரசுகளும் தடை விதிக்க வலியுறுத்தல்
New Delhi: எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தி 20 வீரர்களை கொன்ற நிலையில், அந்நாட்டின் பொருட்களை புறக்கணிக்குமாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தினார். சமீபத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக 'கோ கொரோனா' என முழக்கமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் இந்த அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்தாஸ் அத்வாலே மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். சீனாவின் தாக்குதல் குறித்து அவர் அளித்த பேட்டியில், 'உணவகங்கள் சீன உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். மக்களும் சீன உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்றுள்ளது. சீனா நம்மை அவமதித்து விட்டது. எனவே, நாம் அனைவரும் சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் சீன உணவகங்கள், ஓட்டல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ளார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் வசித்து வரும் அவர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரசுக்கு எதிராக 'கோ கொரோனா' என்ற முழக்கத்தை கூறி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. சிலர் சீன தயாரிப்பு டிவிக்கள், மொபைல்களை தெருவில் போட்டு உடைக்கத் தொடங்கியுள்ளனர்.
டிக்டாக் போன்ற பிரபல சீன ஆப்களை அன் இன்ஸ்டால் பண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சீன தொலைத் தொடர்பு சாதனங்களை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.