This Article is From May 05, 2020

பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி? சர்ச்சையை கிளப்பிய #boyslockerroom குரூப் சேட்!

இன்ஸ்டாகிராமில் boyslockerroom என்ற குழுவில் சக மாணவிகளின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பகிர்ந்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.

#boyslockerroom குறித்து ட்விட்டர் மற்றும் பிற சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • Delhi Police filed cases linked to Instagram group, "Bois Locker Room"
  • Members of this group said to be students from Delhi's top schools
  • Controversy flared after users posted screengrabs on Twitter
New Delhi:

டெல்லியில் பள்ளி மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் குழு அமைத்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என்பது குறித்து குரூப் சேட் செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராமில் boyslockerroom என்ற பெயரில் உள்ள அந்த குழுவில் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் உள்ளனர். அந்த குழுவில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வது எப்படி, என்பது குறித்து சாதாரணமாக குரூப் சாட்டில் பேசப்பட்டு வந்துள்ளது. 

இந்த விவகாரம் தற்போது வெளியில் தெரியவரவே பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இன்ஸ்டா குழு தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும், குரூப் சேட் குறித்த ஸ்கிரின்சாட்டுகளுடன் பதிவு செய்து வந்துள்ளனர். அந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள முக்கிய பள்ளிகளை சேர்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவார்கள். அந்த குழுவில் சக மாணவிகளின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பகிர்ந்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். 

dmed9hm8

பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக மாணவர்கள் பேசிய ஸ்கிரீன் ஸாட்டுகள். 

தொடர்ந்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்தால், சமூகவலைதளங்களில் #boyslockerroom என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தக் குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் டெல்லி போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த மாணவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு, வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். 

சமூகவலைதளங்களில் பரபரப்பாக இயங்கும் மும்பை போலீஸ் குழுவும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்கிரீன் ஷாட்டுகளை சமூகவளைதளங்களில் வெளியிட்டவர்கள் அளித்துள்ள தகவல்படி, பாய்ஸ் லாக்கர் ரூம், குழுவை சேர்ந்தவர்கள் வேறு ஒரு குழுவை தொடங்கி தங்களது உண்மைகளை வெளியிட்ட மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளதாகவும தெரிவித்துள்ளனர். 

.