தற்போது சீனாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற போல்சோனாரோ, வளரும் நாடுகள் குறித்தான அறிவிப்பை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
Sao Paolo, Brazil: இனி தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அல்லது வியாபார நோக்கிற்காக வருவோர்க்கு விசா தேவைப்படாது என்று பிரேசில் (Brazil) நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.
வலதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட போல்சோனாரோ, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசிலின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே அவர், வளர்ந்த நாடுகளில் இருக்கும் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என்று தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது சீனாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற போல்சோனாரோ, வளரும் நாடுகள் குறித்தான அறிவிப்பை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குடிமக்கள் சுற்றுலாவுக்காவோ அல்லது வியாபார நோக்கிற்காகவோ வந்தால், விசா வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது பிரேசில் அரசு. அதே நேரத்தில் பிரேசில் நாட்டு குடிமக்களுக்கு அந்நாடுகள் இதைப் போன்ற சலுகைகள் எதையும் அறிவிக்கவில்லை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)