இன்ஸ்டாகிராமில் கார்சேல் பதிவிட்டுள்ள புகைப்படம்.
ஹைலைட்ஸ்
- 2 ஆண்டுகளாக ஸ்ருதியும் கார்சேலும் காதலித்து வந்தனர்
- கார்சேலை தந்தை கமலுக்கு ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்திருந்தார்
- ஸ்ருதியின் லவ் ப்ரேக் அப் ஆகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி
New Delhi: லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.
7-ஆம் அறிவு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன் தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். கமல்ஹாசனின் மகளான இவர், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார்.
இதனை வெளிப்படுத்தி வந்த இருவரும், அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, இளசுகள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வந்தனர். காதலன் மைக்கேலை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தந்தை கமலுக்கு ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என ஸ்ருதியின் ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில், லவ் ப்ரேக் அப் ஆகி விட்டதாக காதலன் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார்.
மும்பை மிரர் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த கார்சேல் இந்த தகவலை வெளியிட்டார். பரஸ்பர புரிந்துணர்வுடன் இருவரும் பிரிவதாக அவர் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ள மைக்கேல் கார்கேல், ‘இந்த இளம் பெண் (ஸ்ருதி) எப்போது எனது பிரியமான தோழியாக இருப்பார். அவரை நண்பராக பெற்றதை நான் சிறப்பாக உணர்கிறேன். லவ் யு கேல்' என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்து ஸ்ருதியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் இருவருக்கும் இடையே லவ் ஏற்படும் என அவர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
2016-ல்தான் ஸ்ருதி – கார்சேல் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. கார்சேலை பார்க்க ஸ்ருதி அமெரிக்காவுக்கு, ஸ்ருதியை சந்திக்க கார்சேல் இந்தியாவுக்கு அடிக்கடி வந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தின்போது, நடிகர் ஆதவ் கண்ணதாசன் – வினோதினி தம்பதி திருமணத்திற்கு கார்சேல் வ்ந்தார். தமிழ் பாரம்பரிய உடை அணிந்து கார்சேல் கலந்து கொண்டது, அந்த நேரத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)