Read in English
This Article is From Feb 26, 2019

சென்னையில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்!

சென்னை மாநகராட்சி மற்றும் அட்சய பாத்ரா தொண்டு நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உணவு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

Chennai:

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

அட்சய பாத்ரா தொண்டு நிறுவனம் சார்பில் திருவான்மியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், சமூகநல திட்டங்களை செயல் படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பாடங்களை சிறப்பாக கற்க முடியும்.

எனவே தமிழக அரசு, கொடையாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து, இத்திட்டத்தை சென்னை முழுவதும் செயல்படுத்துவதுடன், திட்டம் தமிழகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Advertisement

மேலும், நடப்பு கல்வியாண்டிற்குள் 20ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement