மோடி பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தாலேயே தடுக்க முடியவில்லை என்கிறார் சிதம்பரம்
ஹைலைட்ஸ்
- விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை மோடி இன்று தொடங்கினார்
- 'ஓட்டுக்கு மோடி லஞ்சம் அளிப்பதை தேர்தல் ஆணையத்தாலேயே தடுக்க முடியவில்லை'
- மோடியின் திட்டத்தால் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் அடையும்
New Delhi: விவசாயிகளுக்கு தவணை முறையில் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை ‘ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நாள் இன்று' என ப. சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிக்கப்படும் என்றும் 3 தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று தொடங்கி வைத்தார். இதனை விமர்சித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் கூறியிருப்பதாவது-
‘'ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நாள் இன்று. இதனை தேர்தல் ஆணையம் கூட தடுக்க முடியாது என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும். இன்றைக்கு அதிகாரப் பூர்வமாக விவசாய குடும்பத்தினருக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சத்தை பாஜக அரசு அளிக்கிறது. ‘'
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசின் திட்டத்தின்கீழ் ஒரு கோடி விவசாய குடும்பத்தினர் இணைய உள்ளனர். 2 ஹெக்டேர் நிலம்வரை உள்ள விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
(With inputs from PTI)