This Article is From Oct 15, 2019

மயில் கேக்கை ஆர்டர் செய்த மணமகள்; கிடைத்ததோ வான்கோழி வடிவிலான கேக்

மயில் வடிவிலான கேக்கை ஆர்டர் பண்ணியதற்கு  ‘தொழுநோய் வந்த வான்கோழி’ போன்ற வடிவில் கேக் வந்து சேர்ந்தது என்று விமர்சித்துள்ளார்.

மயில் கேக்கை ஆர்டர் செய்த மணமகள்; கிடைத்ததோ வான்கோழி வடிவிலான கேக்

பேஸ்புக் பதிவிற்கு பின் அந்த பேக்கர் 300 டாலரை திருப்பி செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவில்  ரெனா டாவிஸ் என்ற மணப்பெண் தன் திருமணத்திற்கு மயில் வடிவிலான கேக் ஒன்றினை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு அனுப்பப்பட்டதோ ‘தொழுநோய் வந்த வான்கோழி' போன்ற வடிவில் கேக் வந்து சேர்ந்தது.  ஆன்லைன் மூலம் பேக்கரை தேர்வு செய்த மணப்பெண் அதில் இருந்த புகைப்படத்தை பேக்கரிடம் காண்பித்து மயில் கேக்கை ஆர்டர் செய்தார்.  திருமண கேக்கிற்காக அவர் 300 டாலர் செலுத்தினார். மணப்பெண்ணின் தோழி திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வந்த கேக்கின் படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.  

ஹில் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவின்பாடி “ரெனா டாவிஸ் இரண்டு  மயில்களுடன் இதய வடிவிலான ஃபாண்டண்ட் கேக்கை விரும்பினார். அவற்றில் நீலம் மற்றும் பச்சை வண்ண கப் கேக்குகள் தோகை போல வரவிரும்பினார்.” 

“திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு 6 மணிக்கு உங்கள் திருமண கேக்கை பார்க்க ஆவலுடன் செல்கிறீர்கள் அதில் கேக் பாக்ஸை திறந்ததும் பறவையின் தலை உருண்டு கீழே விழுகிறது.” இதைப் பார்த்ததும் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்.

 மேலும் அது ஃபாண்டெண்டால் மூடப்பட்டிருக்கவில்லை. பேக்கர் தடவிய பட்டர் க்ரீம் மிகவும் மெல்லிய படலமாக மட்டுமே இருந்தது. மயில் வடிவிலான கேக்கை ஆர்டர் பண்ணியதற்கு  ‘தொழுநோய் வந்த வான்கோழி' போன்ற வடிவில் கேக் வந்து சேர்ந்தது என்று விமர்சித்துள்ளார்.

மணமகள் கேக்கை பார்த்ததும் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். பேக்கரோ பணத்தை திரும்ப கொடுக்க மறுத்து விட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பதிவினை 5,000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். 8,000க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். 

பேஸ்புக் பதிவிற்கு பின் அந்த பேக்கர் 300 டாலரை திருப்பி செலுத்தியதாக ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக் பதிவிற்கு பின் அந்த பேக்கர் 300 டாலரை திருப்பி செலுத்தியதாக ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

.