Read in English
This Article is From May 16, 2020

நிலக்கரித்துறை மேம்பாட்டிற்காக ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நிதியமைச்சர் அறிவிப்பு

வர்த்தக நோக்கத்தில் நிலக்கரித்துறையில் தனியாரின் பங்களிப்பும் இருக்கும். ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். 

Advertisement
இந்தியா Edited by

பொருளாதார சீர் திருத்தம் குறித்து 4-வது நாளாக அறிவிப்பை வெளியிடும் நிதியமைச்சர்.

New Delhi:

நிலக்கரித்துறையை மேம்படுத்துவதற்காக ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 3 நாட்களாக விளக்கம் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இன்று 4-வது நாளாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
 

Advertisement

நிலக்கரி துறையை மேம்படுத்த ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இறக்குமதியை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளோம்.

Advertisement

வர்த்தக நோக்கத்தில் நிலக்கரித்துறையில் தனியாரின் பங்களிப்பும் இருக்கும். ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். 

Advertisement

500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலத்திற்கு விடப்படும். அலுமினிய உற்பத்தியை ஊக்கப்படுத்த பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலத்திற்கு விடப்படும். சுரங்கத்றையை மேம்படுத்த நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு வரப்படும். மீத்தேன் வாயு திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. 
 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Advertisement

முன்னதாக விவசாயிகள், சிறு குறு தொழில்கள், மீனவர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நலன் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் நலனுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement