British Airways: பிரிட்டிஷ் விமான விமானிகள் சங்கம் (BALPA) கடந்த மாதம் செப்டம்பரில் 3 நாட்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்திருந்தது.
London: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் இன்று முதல் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். விமானிகளுக்கு ஊதியம் வழங்காததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் விமான விமானிகள் சங்கம் (BALPA) கடந்த மாதம் செப்டம்பரில் 3 நாட்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்திருந்தது.
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதியும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது லாபத்தை தனது விமானிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பால்மா கூறியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் நியமான ஊதிய சலுகை வழங்கி வருவதால் வேலை நிறுத்த நடவடிக்கை நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மாற்று பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது.
விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானிகளின் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பயணிகளுக்கு சரியான முன்னறிவிப்பை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக பல்லாயிரம் பயணிகள் பயண திட்டங்களை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான டிக்கெட் இழப்பீடு புதிய பயண ஏற்பாடுகள் போன்றவற்றை பயணிகளுக்கு ஏற்பாடு செய்யும் நிலைமை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)