பிசெஸ்டரில் அடிக் பாரில் நடைபெற்ற நாடகத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். மருத்துவர்கள் வந்து பார்க்கும் போது அவர் உயிர்பிரிந்திருந்தது.
நிறவெறி நாடகத்துக்காக விமர்சிக்கப்பட்ட பிரபல காமெடியன் இயான் காக்னிட்டோ லண்டனில் நடித்திக்கொண்டிருக்கும் போது மேடையிலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
நகைச்சுவைக்கான டைம் அவுட் விருதை வென்றவர் இவர். பிசெஸ்டரில் அடிக் பாரில் நடைபெற்ற நாடகத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். மருத்துவர்கள் வந்து பார்க்கும் போது அவர் உயிர்பிரிந்திருந்தது.
இந்த இடத்தின் உரிமையாளர் ரியான் மோட் கூறுகையில் "நாடகத்தின் பாதியில் காக்னிட்டோ மயங்கி விழுந்தார். கீழே விழுந்த அவரது தலை மற்றும் கைகள் பின்பக்கமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து தான் நாங்கள் அவர் மயங்கி இருப்பதை உணர்ந்தோம்" என்றார்.
மேலும், "அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களை அழைத்தோம். ஆம்புலன்ஸை அழைத்து கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றினோம். ஆனாலும் அவர் உயிர் பிரிந்து விட்டது" என்றார்.
காக்னிட்டோ 1985ல் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய துவங்கினார். இங்கிலாந்து அரசால் நிறவெறி நாடகத்துக்காக தடை விதிக்கப்பட்டவர். 1999ல் டைம் அவுட் விருதை வென்றார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)