Read in English
This Article is From Aug 11, 2018

ஆங்கிலம் முக்கியம் தான், ஆனால் அதற்கான தாய் மொழியை தவிர்க்க தேவை இல்லை

உலக சூழலில் ஆங்கிலம் முக்கியம் தான், ஆனால் தாய் மொழியை தவிர்த்துவிட்டு ஆங்கிலம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை

Advertisement
Education
New Delhi:

டெல்லி அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. பயிற்சி கொடுப்பது பற்றி கருத்து தெரிவித்த அந்த அமைப்பு “தாய் மொழிக்கு மாற்றானது அல்ல ஆங்கிலம். உலக சூழலில் ஆங்கிலம் முக்கியம் தான். ஆனால் தாய் மொழியை தவிர்த்துவிட்டு ஆங்கிலம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் ‘பன் மொழி கொண்ட இந்தியாவில் மொழிக் கல்வி: படிப்பதிலும், கணக்கிலும் ஏற்படும் தாக்கம்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியை டெல்லி அரசு பள்ளிகளில் நடத்தி வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் பன் மொழி பேசும் திறனை வளார்க்க உதவும் வகையில் ஆராய்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி, மொழியை கற்பதில் தாய் மொழி எவ்வளவு பங்காற்றுகிறது என்பதை நிரூபிக்க மேலும் பல ஆதாரத்தை கொடுக்கும் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் கவுன்சிலின் இந்திய இயக்குநர் ஆலன் ஜெம்மெல்.

Advertisement

இந்த ஆராய்ச்சி 2016-ம் ஆண்டு தொடங்கியது. வீட்டில் ஒரு மொழி பேசு குழந்தைகள், பள்ளியில் வேறொரு மொழியில் படிக்கும்போது, கற்றலில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வதே இதன் நோக்கம்.

இந்த திட்டம் டெல்லி, பாட்னா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement