புதுமண தம்பதிகளின் தேனிலவு பயணத்திற்கு ஊட்டி, கொடைக்கானல் செல்வது வழக்கம். சிலர்,
வெளிநாடுகளுக்கும் சென்று வருவர். இப்படி இருக்கையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புதுமண
தம்பதியர் ஊட்டி மழை இரயிலில் பயணம் செய்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
சமீபத்தில் திருமண செய்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரகம் வில்லியம் லின், சில்வியா
ப்ளேசிக் தம்பதியருக்கு ஊட்டி மலை இரயிலில் தேனிலவு பயணம் சென்று மலைப்பகுதிகளின் இயற்கை
அழகை ரசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து, ஊட்டி மலை இரயிலில் பயணம் செய்வதற்கான 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை
ஐ.ஆர்.சி.டி.சி இரயில்வே சேவைக்கு இங்கிலாந்து தம்பதியினர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
எனவே, 3 பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்ட சிறப்பு மலை இரயிலில், கணவன் - மனைவி இருவர்
மட்டும் தேனிலவு பயணத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 9.10 மணிக்கு இந்த சிறப்பு மலை இரயில் புறப்பட்டு
சென்றுள்ளது. மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்த வில்லியம் தம்பதியர், புகைப்படங்கள் எடுத்துக்
கொண்டும், ஊட்டி மலை இரயிலின் சிறப்பை அறிந்தபடியும் மகிழ்ச்சியாக பயணம் செய்துள்ளனர்
சிறப்பு இரயில் இயக்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். எனினும், 3 லட்சம் ரூபாய்
என்பது அதிக கட்டணமாக பார்க்கபப்டுகிறது. சிறப்பு இரயில் என்பதால், ஒருவருக்கு 1100 ரூபாய்
கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, 3 பெட்டிகள் கொண்ட சிறப்பு இரயிலுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம்
ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இங்கிலாந்து தம்பதியரின் ஊட்டி மலை இரயில் பயணம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது!