Read in English
This Article is From Sep 26, 2019

பிரபலமான மும்பை பிரிட்டானியா &கோ உணவகத்தின் உரிமையாளர் 97வது வயதில் மறைந்தார்

போமன் ஹோஹினூர் “இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 4:45 மணிக்கு காலமானார்” என்று பார்சி பொது மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் இருவரையும் நேரடியாக சந்தித்தார்

Mumbai:

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய ரசிகரும் மும்பை கஃபே உரிமையாளர் போமன் கோஹினூர் காலமானர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த போமன் ஹோஹினூர் வயது 97. மும்பையில் இவரின் தந்தை 1923இல் பிரிட்டானியா &கோ உணவகத்தை திறந்தார். பார்சி உணவகம். மும்பையில் மிகவும் பிரபலமான ஒரு உணவகம் இது. வாழ்நாள் முழுவதும் அங்கு பணி புரிந்தார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் இருவரும் இந்தியா மற்றும் பூடானுக்கு வருகை தந்தபோது அவர்களை நேரில் சென்று சந்தித்தார். 

போமன் ஹோஹினூர் “இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 4:45 மணிக்கு காலமானார்” என்று பார்சி பொது மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார். 

Advertisement

பிரிட்டானியா உணவகத்தின் உள் அலங்காரம் பழைய பிரிட்டிஷ் அரசின் அலங்காரத்துடன் இருக்கும். உணவகத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பெரிய புகைப்படமும் அடுத்ததாக மகாத்மா காந்தியின் உருவப்படமும் இருக்கும். பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது மிகப்பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்டவர். 

Advertisement
Advertisement