This Article is From Feb 02, 2019

‘‘பிரிட்டிஷ் ஆட்சியை விட மோடி ஆட்சி மோசம்’’ – பட்ஜெட்டை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடு

மக்களவை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டாக இருந்தபோதிலும் ஆந்திராவுக்கு எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

‘‘பிரிட்டிஷ் ஆட்சியை விட மோடி ஆட்சி மோசம்’’ – பட்ஜெட்டை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடு

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்தார் சந்திரபாபு நாயுடு.

Amaravati:

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோடி ஆட்சி மோசம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கான அறிவிப்பு ஏதும் இல்லை என்று கூறி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம் செய்து வருகிறார். பட்ஜெட் கூறித்து அவர் கூறியதாவது-

ஆந்திர மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டில் கூட ஆந்திராவுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன். இருப்பினும் மோடி சார் என்றுதான் அவரை அழைக்கிறேன். ஆனால் ஆந்திராவின் தேவைகளை மோடி கவனத்தில் கொள்ளவில்லை. அமராவதிக்கு மாசடைந்த நீரைத்தான் மோடி அளித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியை விட மோடி அரசு மோசமாக உள்ளது. நாம் எதற்காக மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும்? மாநில வருவாயை பெற்றுக் கொள்வதில் மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?. ஆந்திரா இந்தியாவில்தான் இருக்கிறதா?

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு வலுவான தலைவர் யாரும் இல்லை. வெங்கையா நாயுடு என்கிற ஒருவர் மட்டும்தான் இருக்கிறார். அவரையும் பாஜக ஓரம் கட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.