டெல்லி வன்முறையில் 50 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 200 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் (கோப்பு)
ஹைலைட்ஸ்
- News Broadcasters Association said it was "shocked" by the move
- Centre revoked the 48-hour ban on the news channels on Saturday
- The Malayalam channels were suspended over the coverage of Delhi violence
New Delhi: இரண்டு மலையாள செய்தி சேனல்களை தடை செய்வதற்கான முடிவு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிக்கு "தெரியாமல்" எடுக்கப்பட்டது "அதிர்ச்சியளிக்கின்றது" எனச் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம்(என்.பி.ஏ) கூறியுள்ளதுடன், இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணையையும் கோரியுள்ளது.
அறிக்கையில், என்.பி.ஏ தலைவர் ரஜத் சர்மா, கேரளாவைத் தளமாகக் கொண்ட இரண்டு செய்தி சேனல்களான ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் நியூஸ் மீது 48 மணி நேர தடை விதிக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் முடிவைக் கண்டிப்பதாகக் கூறினார்.
இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய அக்கறையையும், பின்னர் இரண்டு செய்தி சேனல்களுக்கும் விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறுவதையும் என்.பி.ஏ பாராட்டியதாகத் திரு சர்மா கூறினார்.
"தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் இது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிந்து என்.பி.ஏ அதிர்ச்சியடைந்தது" என்று அவர் கூறினார்.
"செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை விதிக்கும் உத்தரவு அவரது ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று என்.பி.ஏ கோருகிறது" என்று சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி ஒளிபரப்பு தொடர்பான அனைத்து புகார்களும் செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையத்திற்கு (என்.பி.எஸ்.ஏ) - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஏ.கே.சிக்ரி தலைமையிலான சுய ஒழுங்குமுறை அமைப்புக்கு அனுப்பப்பட வேண்டும். இதனால் எதிர்காலத்தில் இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என என்.பி.ஏ குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் கடந்த மாதம் நடந்த வகுப்புவாத வன்முறையை மூடிமறைக்கும் அதே வேளையில், "ஒரு சமூகத்துடன் இணைந்து செயல்படுவது" என்ற தனித்தனி குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், இரண்டு முன்னணி மலையாள செய்தி சேனல்களுக்கான 48 மணி நேரத் தடையை மத்திய அரசு சனிக்கிழமை ரத்து செய்தது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த வன்முறையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கின்றார்கள். மேலும் இதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவடேகர் சனிக்கிழமை பிரதமர் மோடி முழு பிரச்சினையிலும் கவலை தெரிவித்ததாகவும், அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்ததாகவும் கூறினார். இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஏதேனும் தவறு நடந்தால் "அத்தியாவசிய நடவடிக்கைகளை" எடுப்பதாக அமைச்சர் கூறியிருந்தார்.
"ஆனால் பொறுப்பான சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்றும் அவர் கூறியிருந்தார்.
வன்முறைகள் குறித்த செய்தி தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் மேற்குறிப்பிட்ட இரண்டு சேனல்கள் 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ உத்தரவுகளில், பிப்ரவரி 25 நிகழ்வுகளில் "வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கிய பக்கத்தையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று கூறியிருந்தது.