ஆளும் அரசு மீது 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
New Delhi: கர்நாடகாவில் ஆளும் அரசு மீது 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்றாலும் பெரும்பான்மை இல்லாததால் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா 3 நாட்களில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் கூறியதாவது, கர்நாடகாவில், 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் அரசு மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் மே.19ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
இதேபோல், சமீபத்தில் மைசூரில் நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிகாட்டிய அவர், கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று கூறினார். மேலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது குறித்து யாரும் கவலைக் கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.
கர்நாடகாவில், நேற்று காதலனை கொடூரமாக தாக்கி அவர் கண் முன்பே அவரது காதலியை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.