This Article is From Aug 03, 2020

எடியூரப்பாவின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1.34 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர். 

எடியூரப்பாவின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி!

பி.எஸ்.யெடியுரப்பா கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்து நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆறு ஊழியர்களுக்கும் கொரோனா
  • அவரது மகன் விஜயேந்திராவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
  • எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்ப்டுள்ளது
Bengaluru:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆறு ஊழியர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்ப்டுள்ளது. ஆனால், அவரது மகன் விஜயேந்திராவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

முன்னதாக எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நலமாக உள்ளபோதும் மருத்துவர்களின் பரிந்துரையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டிவிட் செய்திருந்தார். மேலும்,

“யாரும் கவலைப்படக்கூடாது. நான் விரைவாக குணமடைந்து மீண்டும் திரும்பிவிடுவேன். உங்கள் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எப்போதும் என்னுடன் இருக்கட்டும். தயவுசெய்து நீங்கள் முககவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வைரஸிலிருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்.” என்றும் எடியூரப்பா கூறியிருந்தார்.

நேற்று, தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பத்தாவது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1.34 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர். 

.