This Article is From Jun 14, 2019

கடத்தல்காரர்களிடம் இருந்து 70 வெளிநாட்டு பறவைகள் மீட்பு!!

ஆஸ்திரேலிய பறவைகள் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடத்தல்காரர்களிடம் இருந்து 70 வெளிநாட்டு பறவைகள் மீட்பு!!

மேற்கு வங்கத்தில் வெளிநாட்டு பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

North 24 Parganas, West Bengal:

கடத்தல்காரர்களிடம் இருந்து 70 வெளிநாட்டுப் பறவைகளை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பறவைகள் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அவர்கள், சோதனையை தீவிரப்டுத்தினர்.

இதில் குனார்மத் எல்லை பகுதியில் கடத்தப்படவிருந்த 70 பறவைகள் மீட்கப்பட்டன. அவை அனைத்தும் பேட்ராபோலில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேட்ரா போல் என்பது இந்தியாவுக்கும் வங்க தேசத்திற்கும் இடையில் உள்ள சோதனை சாவடி ஆகும்.

.