சிபிஐ விவகாரத்தில் அதிக வனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மாயாவதி கூறுகிறார்.
Lucknow: மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் சிபிஐ-க்குள் அதிகாரப் போட்டிகள் ஏற்படுவதற்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐக்குள் நடக்கும் அதிகாரப்போட்டிகள் உச்சகட்டத்தை எட்டின. இதையடுத்து இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு மதிய அரசு உத்தரவிட்டது. இதன்பின்னர் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியிமக்கப்பட்டார்.
நாட்டின் மிக முக்கியமான விசாரணை அமைப்பான சிபிஐக்குள் நடக்கும் பிரச்னைகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
சிபிஐ-க்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு அதிகாரிகளை விட மத்திய அரசுதான் முக்கிய காரணம். சாதி மற்றும் வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்தும் தவறான கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் சிபிஐ மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜய் மல்லையா,நீரவ் மோடி, மெஹ்லுல் சோக்ஸி, ரஃபேல் விவகாரம் உள்ளிட்டவை முறையாக விசாரிக்கப்படவில்லை. சிபிஐ-யை பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மீது ஏவும் வேலையைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பாஜக இதே வேலையை செய்து வருவதால், மத்திய அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.