2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், கடந்த சில ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்ச வரம்பான ரூ.2½ லட்சம் என்பதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனவே இது தொடர்பாக நிதி மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு வெளிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி செலுத்தும் 3 கோடி நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.