பட்ஜெட் 2019 : மத்திய அரசு ரூ. 6000 சிறு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்புகிற பிரதமர் கிஷான் திட்டம் என்ற வரலாற்று திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்புள்ள அல்லது அதற்கு குறைவாக உள்ள சிறிய விவசாயிகள் ரூ.6,000னால் நன்மை அடைவார்கள். பியூஸ் கோயல் இந்த பணம் ரூ.2000 மாக மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்”
2014-ம் ஆண்டில் 2.5 கோடி குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் 18 நூற்றாண்டிலே வாழ்ந்து வந்தார்கள். அப்படியான எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு வந்தோம் என்று பியூஷ் கோயல் கூறினார். “உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் ஆகியவற்றை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இதுவரை 10 லட்சம் பேர் இதனால் உதவி பெற்றுள்ளனர்”