பட்ஜெட் தயாரிப்பு பணி தொடர்பான புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2019-20 தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. உயர் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அல்வாவை வழங்கி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், பட்ஜெட் தயாரிப்பு பணியில் நேரடியாக ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர் இனிப்புகளை பெற்றுக் கொண்டனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையில் அவர்கள் அமைச்சகத்தில் மட்டும்தான் தங்கியிருப்பார்கள். அதுவரையில் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இருக்காது.
ஜூலை 5-ம்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டைதாக்கல் செய்யவுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், இணை அமைச்சர் அனுராக் தாகூர், நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க், வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் பட்ஜெட் உரைகள் அச்சடிக்கப்படும் இடங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.