This Article is From Feb 08, 2019

''2000 மின்சார பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும்'' - பட்ஜெட்டில் அறிவிப்பு

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

''2000 மின்சார பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும்'' - பட்ஜெட்டில் அறிவிப்பு

பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்.
  • புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது
  • பட்ஜெட் மீதான விவாதத்திற்கு வரும் 15-ம்தேதி ஓபிஎஸ் பதில் அளிப்பார்

2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பி.எஸ். தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

இதில் முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் உடையவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்தது. அதேபோன்று விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து வரும் 15-ம்தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசுவார்.

.