This Article is From Feb 01, 2019

பட்ஜெட் குறித்து என்ன சொன்னார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல்..?

Budget 2019: ‘நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன’- கோயல்

பட்ஜெட் குறித்து என்ன சொன்னார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல்..?

Budget 2019: ‘இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதனால், பல விஷயங்களை எங்களால் செய்ய முடியவில்லை'- கோயல்

ஹைலைட்ஸ்

  • பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது
  • இந்த பட்ஜெட்டை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்
  • நிதி அமைச்சராக இருந்த ஜெட்லி, சிகிச்சை எடுப்பதற்கு வெளிநாடு சென்றுள்ளார்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில், ‘2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிசான் திட்டம் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். 3 தவணைகளில் இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குளில் செலுத்தப்படும். கிசான் திட்டம் மூலம் 12.5 கோடி விவசாயிகள் குடும்பம் பயனடையும். டிசம்பர் 2018 முதலே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசுக்கு  75,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 

மேலும் அவர், ‘5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது. 6.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் பி.எஃப் உள்ளிட்ட முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரி கிடையாது. இதன் மூலம் 3 கோடி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்' என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல், 

‘ராஷ்டிரிய காமதேனு ஆயோத் திட்டத்தை மாடுகளை காப்பதற்காக நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' 

‘ஏசி அறைகளில் இருக்கும் மிகப் பெரிய குடும்பப் பன்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சிறிய விவசாயிகளின் நிலைமை குறித்துப் புரியாது'

‘நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன'

‘ராணுவத் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது, இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் பிரதமர் மோடி அரசுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது' 

‘இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதனால், பல விஷயங்களை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால், அனைத்து குடிமக்களுக்கும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நினைத்தோம்' என்று பேசினார். 
 

.