বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 01, 2020

வங்கி டெபாசிட் செய்தவர்களுக்கான காப்பீடு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு!

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்தவொரு வங்கியும் டெபாசிட் செய்தவர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையை திரும்பி அளிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கான அதிகபட்ச காப்பீடாக அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.1 லட்சம் வரை இருந்தது.

Advertisement
இந்தியா Edited by

வங்கி டெபாசிட் செய்தவர்களுக்கான காப்பீட்டை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்தவொரு வங்கியும் டெபாசிட் செய்தவர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையை திரும்பி அளிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கான அதிகபட்ச காப்பீடாக அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.1 லட்சம் வரை இருந்தது. 

சேமிப்பு அல்லது டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையை பொருட்படுத்தாமல் ரூ.1 லட்சம் காப்பீடாக இருந்தது. 

Advertisement