எல்ஐசியின் 100 சதவீத பங்குகளையும் அரசு மட்டுமே வைத்திருந்தது.
எல்ஐசி பங்குகளின் ஒரு பகுதி பங்குகளை தனியாருக்கு புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதற்காக வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது மேற்கொள்ளும் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக மேற்கொண்ட எந்த விவரங்களையும் தெரிவிக்காத அவர், எல்ஐசியில் அரசு வைத்திருக்கும் பங்குகளின் ஒரு பகுதி பங்குகளை மட்டும் புதிய பங்கு வெளியீடு மூலம் விற்கப்படும் என்று அறிவித்தார்.
1956ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவப்பட்டது. எல்ஐசியின் 100 சதவீத பங்குகளையும் அரசு மட்டுமே வைத்திருந்தது.
நடப்பு நிதியாண்டில் ரூ.1.55 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, நிதியாண்டு 21க்கு ரூ.2.1 லட்சம் கோடி விலக்கு இலக்காக அரசு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு தன்வசம் இருந்த ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து, வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது என்று கூறிய நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் மூலதன கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.5 லட்சம் கோடி வழங்கப்படும் என்றார். மேலும், மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகளும் விற்பனை செய்யப்படும் என்று நிர்மலா அறிவித்தார்.