Read in English
This Article is From Feb 01, 2019

பட்ஜெட் அல்ல; தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் - கொதிக்கும் காங்கிரஸ்

ஏப்ரல்-மே-யில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

Advertisement
இந்தியா

பட்ஜெட் ஒரு பாஜகவின் தேர்தல் அறிக்கை என்கிறார் மல்லிகார்ஜுன கார்கே

New Delhi:

இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் என்பது மக்களவை தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்னர் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தேர்தல் வரவிருக்கும் நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக நிறைவேற்ற முடியாத அறிக்கைகளை பட்ஜெட்டில் பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பட்ஜெட் என்று சொல்வதை விட பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். 

பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட் அல்ல; மக்களவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம். 

Advertisement

எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டன?. மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் தங்களை பாஜக முட்டாளாக்க முயற்சிப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 

இந்த பட்ஜெட் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றுவார் என்று தெரியவில்லை. ஏனென்றால் நிச்சயமாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. 

Advertisement

இவ்வாறு அவர் கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement