பிப்ரவரி 13-ம்தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது
New Delhi: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1-ம்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜனவரி 31-ம்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரைக்கும் நடைபெறுகிறது. அரசியல் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படுவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இதுதான் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக மாறியுள்ளது.